சென்னையில் தனியார் உணவக காரக்குழம்பில் கிடந்த காது துடைக்கும் பட்ஸ் - வாடிக்கையாளர் அதிர்ச்சி
சென்னையில்உள்ள ஒரு தனியார் உணவகத்தில் காரக்குழம்பில் காது துடைக்கும் பட்ஸ் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரக்குழம்பில் கிடந்த காது துடைக்கும் பட்ஸ்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் மதிய சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது காரக்குழம்பில் காது துடைக்கும் பட்ஸ் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவர் ஓட்டல் நிர்வாகனத்திரிடம் இது குறித்து வாக்குவாதம் செய்தார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.