தகாத உறவு; நெருக்கத்தின் போது அழுத குழந்தை - அடித்தேக் கொன்ற கொடூரம்!
குழந்தை தாயால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (32). இவருக்கு மீன்பிடித் தொழிலாளி ஒருவரின் மனைவி பிரபுஷா (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரபுஷா 15 மாத குழந்தையை அழைத்துக்கொண்டு, உசேனுடன் சென்றுவிட்டார். இருவரும் மயிலாடி பகுதியில் ஒரு கோழிப் பண்ணையில் தங்கி, வேலைசெய்து வந்தனர்.
கொடூர கொலை
இந்நிலையில், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து பரிசோதித்ததில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், முகம் உள்ளிட்ட இடங்களில் சந்தேகத்துக்கிடமாக தளும்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனே தகவலறிந்து வந்த போலீஸார் நடத்திய விசாரணையில், பிரபுஷாவுடன் ஒன்றாக வசித்து வரும் சதாம் உசேனுக்கு ஏற்கெனவே மூன்று திருமணங்கள் ஆகியிருக்கின்றன. முத்தலாக் கூறி உறவை முறித்துள்ளார். 4வதாக பிரபுஷாவைத் திருமணம் செய்வதாகக் கூறி, அவருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து இருந்த சமயத்தில், குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், எரிச்சலடைந்து அடித்துக் கொடூரமாகக் கொலைசெய்திருக்கின்றனர். பேச்சு மூச்சில்லாமல் இருந்த குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.