பால் பவுடரில் மது; கோமாவில் 4 மாத குழந்தை - பாட்டியின் தவறால் நேர்ந்த சோகம்!
மூதாட்டி ஒருவர் தவறுதலாக பால் பவுடரில் மதுவை கலந்ததால் 4 மாத குழந்தை கோமா நிலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பால் பாட்டில்
இத்தாலி நாட்டை சேர்ந்த மூதாட்டி ஒருவர், தனது 4 மாத பேரக்குழந்தைக்கு குடிக்க பால் பாட்டிலை தயார் செய்தார். அந்த பாட்டி குழந்தையின் அடர் நிற கண்ணாடி தண்ணீர் பாட்டிலை, மது பாட்டிலுடன் குழப்பி திரவத்தை தவறுதலாக கலக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனை குழந்தை சிறிதளவு குடித்துவிட்டு மீண்டும் குடிக்க மறுத்துள்ளது. அப்போது பாட்டிலில் இருந்து மது வாசனை வந்ததால், மூதாட்டி உடனடியாக தனது பேரனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கோமாவில் குழந்தை
ஆனால் குழந்தை இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. தற்போது குழந்தையின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, ஆனால் குழந்தை கோமா நிலையில் இருப்பதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் குழந்தையின் மருத்துவப் பதிவேடுகளை ஆய்வு செய்த பிறகே முடிவு எடுக்கப்படும். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.