2024: உலக தலைவர்கள் கொலை முதல் வானிலை வரை - அச்சுறுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு!
அடுத்தாண்டு என்ன நடக்கும் என்பது குறித்த பாபா வாங்கா கணிப்புகள் வெளியாகியுள்ளது.
பாபா வாங்கா
சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய பல நிகழ்வுகள் பாபா வாங்கா கணித்ததாகும். குறிப்பாக, இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம்,
சோவியத் யூனியனின் வீழ்ச்சி என்று இவர் கணித்த ஒவ்வொன்றும் உலக அரசியலை மாற்றிய விஷயங்களாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், 2024ல் என்னவெல்லாம் நடக்கும் எனக் கணித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
2024க்கான கணிப்புகள்
அதன்படி, ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சி நடக்கும். இது பெரும்பாலும் அண்டை நாட்டால் மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே இருக்கும். ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும். அங்குள்ள ஒரு முக்கிய நாடு அடுத்த ஆண்டு பயோ ஆயுதங்களைச் சோதனை செய்யும்.
கடன் வரம்புகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் என பொருளாதார நெருக்கடி இருக்கும். பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இருக்கும். சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும்.
ஹேக்கர்கள் பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பைக் குறிவைப்பார்கள்.
அல்சைமர், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு புதிய சிகிச்சை முறை வரும். குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் ஒரு பெரிய திருப்புமுனை இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.