பேராபத்து; அடுத்தடுத்து நடக்கபோவது இதுதான் - பாபா வங்கா பகீர் கணிப்பு!
2024ஆம் ஆண்டுக்கான பாபா வாங்காவின் கணிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாபா வங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.
அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. 1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து,
பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன.
2024 முக்கிய கணிப்புகள்
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு பற்றியும் அவர் சில கணிப்புகளைச் கணித்து வைத்துள்ளார். அதன்படி, உலக வெப்ப அலைகளின் அதிர்வெண் 67 சதவீதம் அதிகரித்துள்ளது. உச்ச வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளது.
சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும். உலகப் பொருளாதார சக்தியின் கட்டமைப்பு மாறும். அரசியல் பதட்டங்களும் கடன்சுமைகளும் அதிகரிக்கும். ஒரு பெரிய உலக நாடு உயிரியல் ஆயுதங்களை சோதிக்கும் எனக் கணித்துள்ளார்.