2024: ஒரே வாரத்தில் அபப்டியே நடக்குதே.. கணித்த பாபா வாங்கா - பகீர் சம்பவம்!
பாபா வங்கா கணிப்பில் 2 சம்பவங்கள் நடந்துள்ளன. பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா.
பாபா வங்கா
1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது.
1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது. இந்நிலையில், 2024ல் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும். புற்றுநோய்க்கான தீர்வு கண்டுபிடிக்கப்படும்.
தொடர் சம்பவங்கள்
குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார் என்று கணித்திருந்தார்.
அதன்படி, ஜப்பானில் புத்தாண்டு தினத்தில் சுனாமி ஏற்பட்டது. கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஊருக்குள் கடல் நீர் வந்தது. 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அதன்பின், அமெரிக்கா ப்ளோரிடாவில் உள்ள மியாமியில் இருக்கும் மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 அடி உயரமுள்ள வேற்றுகிரக ஏலியன் ஒன்று மாலில் சுற்றித் திரிந்ததால். அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவ்வாறு தொடர்ந்து அவர் கணிப்பில் 2 சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் பரபரப்பு நிலவியுள்ளது.