இந்தியா-பாகிஸ்தான் போர்? அப்படியே பலிக்கும் பாபா வாங்கா கணிப்பு
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாபா வங்காவின் கணிப்புகள் வைரலாலகி வருகிறது.
பஹல்காம் தாக்குதல்
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன.
பாபா வங்கா கணிப்பு
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய அரசு உறுதிப்படுத்திய நிலையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், பாபா வாங்கா இந்திய-பாகிஸ்தான் போர் அல்லது குறிப்பாக பாகிஸ்தானின் அழிவு குறித்து அவர் தெளிவான அல்லது நேரடியான கணிப்புகளை கூறவில்லை.
இருப்பினும், அவரது சில அறிக்கைகள் பாகிஸ்தானில் அழிவு மற்றும் பேரழிவுக்கான சாத்தியத்தை கூறும் வகையில் உள்ளது. எனவே இதனை போரோடு மக்கள் தொடர்புபடுத்தி வருகின்றனர்.