அயோத்தியில் மத சுற்றுலாவை மேம்படுத்த ..யோகி அரசின் மாஸ்டர் பிளான்!
வெளிநாட்டுப் பக்தர்களுக்காக ராமரின் வாழ்க்கை வரலாற்றை 3D வீடியோவில் வெளியிட உபி அரசு திட்டமிட்டுள்ளது.
அயோத்தி
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. அதன் காரணமாக அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது.
இக்கோவில் கருவறையில் பால ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பால ராமர் சிலை திறந்து வைத்தார்.இதனையடுத்து இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். மேலும் அயோத்தி முக்கிய சுற்றுலா தளமாக மாறி வருகிறது.
3D வீடியோ
இதனிடையே அயோத்தியில் ராமர் கோவிலுக்கு வரும் வெளிநாட்டுப் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு அயோத்தியில் மத சுற்றுலாவை மேம்படுத்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு வெறும் 9 நிமிட 3டி வீடியோ மூலம் ராமரின் 14 ஆண்டுக்கால வனவாசக் கதை வெளியிட உள்ளது. இதற்காக மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.