தக்காளி அதிகம் சாப்பிடுறீங்களா? சிறுநீரக கற்கள் உண்டாகுமா! இதுதான் உண்மை

Tomato Kidney Disease Life Style
By Sumathi Oct 16, 2025 12:21 PM GMT
Report

தக்காளி அதிகம் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என்ற தகவல் பரவி வருகிறது.

 சிறுநீரக கற்கள்

தக்காளி அதிகம் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என பலர் நம்புகின்றனர். ஆனால் மருத்துவ ரீதியாக இது நிரூபிக்கப்படவில்லை. சிறுநீரக கற்கள் உருவாக ஆக்சலேட்டுகள்தான் காரணம்.

தக்காளி அதிகம் சாப்பிடுறீங்களா? சிறுநீரக கற்கள் உண்டாகுமா! இதுதான் உண்மை | Avoid Tomatoes In Kidney Disorders Details Tamil

தக்காளியில் ஆக்சலேட்டுகள் உள்ளன. ஆனால், 100 கிராம் தக்காளியில் சுமார் 5 மில்லி கிராம் அளவே ஆக்சலேட்டுகள் உள்ளன. இந்த அளவு கற்களை உருவாக்காது. சிறுநீரகக் கற்கள் உருவாக உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமையே மிக முக்கியக் காரணம்.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சட்னி! இன்னும் பல நன்மைகள்

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சட்னி! இன்னும் பல நன்மைகள்

எதனால் உருவாகிறது?

தினமும் 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அல்லது சில அரிய வளர்சிதை மாற்றக் கோளாறுகள் (Oxalosis) காரணமாகவும் கற்கள் உருவாகலாம். மேலும், சிலருக்கு யூரிக் அமிலம் அதிகமாகச் சேர்வதால் கற்கள் உருவாகலாம்.

தக்காளி அதிகம் சாப்பிடுறீங்களா? சிறுநீரக கற்கள் உண்டாகுமா! இதுதான் உண்மை | Avoid Tomatoes In Kidney Disorders Details Tamil

இவர்கள் மட்டுமே மீன், இறைச்சி போன்ற பியூரின் நிறைந்த உணவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக சிறுநீரகக் கற்களைத் தடுக்க, தக்காளியைக் குறைப்பதை விட, போதுமான தண்ணீர் குடிப்பது மற்றும் அடிப்படை நோய்களுக்குச் சிகிச்சை பெறுவதுமே முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.