கூவத்தூர் விவகாரம்: திரிஷா.. என்னை மன்னிச்சிடுங்க - Video வெளியிட்ட ஏ.வி.ராஜு!

Trisha Tamil nadu Indian Actress Tamil Actors Tamil Actress
By Jiyath Feb 21, 2024 03:27 AM GMT
Report

நடிகை திரிஷா குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார் ஏ.வி.ராஜு.  

சர்ச்சை பேச்சு 

சேலம் மாவட்டம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், கூவத்தூர் தனியார் விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாக கூறியதுடன், நடிகை திரிஷாவின் பெயரையும் குறிப்பிட்டார்.

கூவத்தூர் விவகாரம்: திரிஷா.. என்னை மன்னிச்சிடுங்க - Video வெளியிட்ட ஏ.வி.ராஜு! | Av Raju Asks Apology To Actress Trisha

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இயக்குநர் சேரன், நடிகர் மன்சூர் அலிகான், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நடிகை திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என வேதனை தெரிவித்தார்.

குடிசை வீட்டிலிருந்து நீதிபதியான கூலித்தொழிலாளி மகள் - சாதித்த அரசுப் பள்ளி மாணவி!

குடிசை வீட்டிலிருந்து நீதிபதியான கூலித்தொழிலாளி மகள் - சாதித்த அரசுப் பள்ளி மாணவி!

மன்னிப்பு 

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு மன்னிப்பு கோரி ஏ.வி. ராஜு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமூக வலைதளங்களில் சிலர் என் மீது அவதூறான ஒரு செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

கூவத்தூர் விவகாரம்: திரிஷா.. என்னை மன்னிச்சிடுங்க - Video வெளியிட்ட ஏ.வி.ராஜு! | Av Raju Asks Apology To Actress Trisha

இந்த செய்தியை எந்த இடத்திலும் சொல்லவில்லை, அந்த செய்தியை சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் சொன்னதாக சொன்னார், அதனால், நான் மீண்டும் அவருடைய பெயரை சொல்ல விரும்பவில்லை. நான் அந்த அம்மாவைப் பற்றி எந்த இடத்திலுமே விமர்சனத்துக்கு கொண்டு வரவில்லை. நான் மற்ற இடத்தில் பேசும்போதுகூட, இவங்களுக்கு சம்பந்தமே இல்லை.

எனக்கும் அவருக்கும் அரசியல் ரீதியாக காழ்ப்புணர்ச்சி இருந்ததே ஒழிய, நான் எந்த இடதிலேயும் திரைப்பட நடிகையயோ, மற்ற யாரையும் சொல்லவில்லை. இது தவறாக சித்தரித்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அது அப்படி என்று எனக்குத் தெரியவில்லை. திரைப்பட இயக்குனர் சேரனுக்கும், ஆர்.கே. செல்வமணிக்கும் மற்றும் திரிஷா அம்மாவுக்கும் என்னுடைய பணிவான வேண்டுகோள்.

ஒருவேளை, உங்களுடைய மனது புண்படும்படியாக இருந்திருந்தால், நான் சமூகவலைதளம் மூலமாக மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.