ஆட்டோக்களில் ஏன் 4 சக்கரங்கள் இல்லை - என்ன காரணம் தெரியுமா?
ஆட்டோக்களில் ஏன் 4 சக்கரங்கள் இல்லை என்பதன் காரணத்தை தெரிந்துக்கொள்வோம்.
ஆட்டோ
இந்தியாவில் பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து மற்றும் தனி நபர் வாகன பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. அதேபோல், ஆட்டோவின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
ஆனால் மற்ற கார்கள், வாகனங்களைப் போன்று ஆட்டோவுக்கு ஏன் 4 சக்கரங்கள் இல்லை என்று தெரியுமா? மூன்று சக்கரங்கள் கொண்ட வாகனத்தை வடிவமைத்தால் செலவு குறையும்.
ஏன் 3 சக்கரங்கள்?
3 சக்கர வாகனம் அளவில் சிறியதாக இருக்கும் என்பதால் குறுகலான பகுதிகளிலும் வளைந்து சென்று விடும். மேலும் எளிதாகவும் பார்க்கிங் செய்து விடலாம். ஆட்டோ எஞ்சின்களை இயக்க மற்ற வாகனங்களை விட குறைவான எரிபொருள் போதுமானது.
அனைத்து வகையான போக்குவரத்திலும் வாகனத்தை விரைவாக முன்னோக்கி நகர்த்த முடியும்.
இந்த அடிப்பைடயில்தான் ஆட்டோக்கள் 3 சக்கரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.