பெட்ரோல் வண்டிக்கு டாட்டா..வெறும் ஒரு லிட்டர் தண்ணீர் தான் - 150 கி.மீ பறக்கும் பைக் வந்தாச்சு !!
வெறும் தண்ணீரில் இயங்கும் வாகனம் ஒன்று இந்தியா சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
Joy E bike
இன்றைய நடுத்தரவர்கத்தினரை பெரிதாக வாட்டி வதைப்பது எது என்று கேட்டால் எளிதாக பலரும் கூறும் ஒரு விஷயம் பெட்ரோல் - டீசல் செலவு. உலக மார்க்கெட்டில் பெட்ரோல் விலை ஏறிய போது அதிகரித்த இந்த விலைகள், குறைந்த போது மட்டும் பெரிதாக குறையவே இல்லை என்பதே பலரின் குமுறல்.
ஆகையால் பலரும் அவதிப்பட்டு தான் வருகிறார்கள். அப்படி இருக்கும் சூழலில், வெறும் தண்ணீர் பாட்டிலில் இயங்கும் வாகனம் ஒன்று விரைவில் அறிமுகமாகவுள்ளதாம். Joy E bike என குறிப்பிடப்படும் அவ்வாகனம், ஹைட்ரஜன் வாகனம் என்றும் தொழில்ரீதியில் அழைக்கப்படுகிறது.
புகழ்பெற்ற பாரத் மொபிலிட்டியான ஆட்டோ நிகழ்வுகளின் மீட்டிங்கில் இந்த வாகனத்தின் முன்மாதிரி வெளியிடப்பட்டது. உங்களிடம் உள்ள தண்ணீர் பாட்டிலில் அடங்கியிருக்கும் ஹைட்ரஜன் மூலக்கூறுகளை கொண்டு சூரியனின் ஒளி சக்தியை வைத்து இந்த வாகனம் இயங்குகிறதாம்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு
மற்ற மோட்டார் வாகன நிறுவனங்களுடன் இணைத்து உருவாக்க, முன்மாதிரி வெளியிடப்பட்டுள்ள நிலையில், வருங்காலத்தில் வரவிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் இவை இயங்கும் என கூறப்படுகிறது.
ஒரு லிட்டர் தண்ணீர் மட்டுமே கொண்டு இந்த வாகனம் சுமார் 150 கிலோ மீட்டர் வரை செல்லும் வகையிலும் இவை வடிவைக்கமைக்கப்பட்டுள்ளது. இவை இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.