இது இல்லாம வண்டிய எடுத்துறாதீங்க - 3 மாசம் ஜெயில் தண்டனை!! மத்திய அமைச்சகம் எச்சரிக்கை

Government Of India
By Karthick Jun 13, 2024 10:23 AM GMT
Report

காப்பீடு இல்லாமல் மோட்டார் வாகனம் இயக்குவது குற்றம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது.

வாகன இயக்கம்

வாகனம் இயக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், பல நகரங்கள் பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

Bike car in police checking

அதே நேரத்தில், வாகன விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. மரணங்களும் அதிகரிக்கும் காரணத்தால், அரசு பல கெடுபிடியான கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டுவந்து கொண்டிருக்கின்றன.

எச்சரிக்கை

தலைக்கவசம், சீட் பெல்ட், லைசென்ஸ் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வாகன காப்பீடும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இனி FasTag தேவையில்லை - செயற்கைக்கோள் மூலம் சுங்க வரி கட்டலாம் !!அதிரடி காட்டும் இந்திய அரசு

இனி FasTag தேவையில்லை - செயற்கைக்கோள் மூலம் சுங்க வரி கட்டலாம் !!அதிரடி காட்டும் இந்திய அரசு

தற்போது மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 3-ஆம் தர சாலை போக்குவரத்து காப்பீடு இல்லாமல் வாகனம் இயக்குவது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 party insurance

அவ்வாறு காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்குவோர் பிடிக்கப்பட்டால்,அவர்களுக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது அமைச்சகம்.