ஜேசிபி ஏன் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டது? முன்பு என்ன நிறத்தில் இருந்தது - ஆச்சர்ய தகவல்!
Technology
By Sumathi
ஜேசிபி மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்ட தகவல் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
ஜேசிபி
ஜேசிபி இயந்திரங்கள் கட்டிடம் கட்டுவது, சாலையில் பள்ளம் தோண்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஆரம்பத்தில் ஜேசிபி இயந்திரங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில்தான் இருந்தன. ஆனால் பின் நாட்களில் ஜேசிபி இயந்திரங்களை மஞ்சள் நிறத்திற்கு அதன் நிறுவனம் மாற்றிவிட்டது.
நிறத்திற்கான காரணம்
ஏனெனில் இந்த நிறம் பகல் அல்லது இரவு என எந்நேரம் என்றாலும் ஜேசிபி இயந்திரம் பார்வைக்கு எளிதாக புலப்படும்.
இதன் மூலமாக கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை ஒருவரால் எளிதாக அறிந்து கொள்ள முடியும் என காரணமாக கூறப்படுகிறது.