எல்லாம் AI பாத்துக்கும்; வாரத்தில் 4 நாட்கள் தான் வேலை - அசூர வேகத்தில் டெக்னாலஜி!

Artificial Intelligence
By Sumathi Nov 27, 2023 08:31 AM GMT
Report

செயற்கை நுண்ணறிவு குறித்தான அச்சம் தான் தற்போது பரவலாக உள்ளது.

செயற்கை நுண்ணறிவு

மனிதர்கள் செய்யக்கூடிய பல வேலைகளை செயற்கை நுண்ணறிவு மிகச் சுலபமாக தொழில் நுட்பத்தின் உதவியுடன் செய்து விடும் என்பது உதவியாக கூறப்பட்டாலும், அது ஆபத்து என்பதும் மறுக்க முடியாத உண்மை.

artificial-intelligence

சமீபத்திய ஆய்வுகளில், ஒரு வாரத்தில் மனிதர்கள் செய்யும் வேலையை நான்கு நாட்களில் நிறைவேற்ற ஏஐ உதவும். இதனால் தான் பலருடைய வேலைகளை இது பாதிக்கும் என்று ஊழியர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

18 வருஷம்.. பக்கவாதத்தால் நோயாளி அவதி - AI உதவியால் பேசும் அதிசயம்!

18 வருஷம்.. பக்கவாதத்தால் நோயாளி அவதி - AI உதவியால் பேசும் அதிசயம்!

உதவியா? ஆபத்தா?

ஒரு நபர், ஒரு வேலையை செய்வதற்கு நான்கு நாட்கள் எடுத்துக் கொள்கிறார் என்றால், AI அடுத்து நாட்களுக்கான வேலையை தொடர்ந்து செய்யும். இதன் உதவியுடன் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் யுகேவிலும், 3 கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க ஊழியர்களும் பலன் பெறுவார்கள்.

adopting to AI

தங்கள் முதலீடுகளுக்கு ஏற்ற வருமானம் வேண்டும் என்று விரும்பும் நிறுவனங்களுக்கும் இது சாதகமாக இருக்கும். மனிதர்களும் செயற்கை நுண்ணறிவும் இணைந்து வேலை செய்யும்போது நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய சாதகமாகவும்,

குறைந்த செலவில் வேலைகளை செய்வதற்கும் உதவும். ஏற்கனவே, சாட்ஜிபிடி தன்னால் எந்தவிதமான வேலைகளை எல்லாம் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருப்பது குறிப்பிடத்தக்கது.