என்னது இது பெண்ணில்லையா? செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர்!

Odisha
By Jiyath Jul 11, 2023 02:07 AM GMT
Report

ஒடிசாவில் ஓடிவி என்று அழைக்கப்படும் தனியார் தொலைகாட்சி ஒன்று செயற்கை நுண்ணறிவும ஏஐ செய்தி வாசிப்பாளரை உருவாக்கியுள்ளது.

ஏஐ லிசா

ஏஐ (AI) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி இப்போது உலங்கெங்கும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒடிசாவைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி ஒன்று ஏஐ என்று செயற்கை அழைக்கப்படும் நுண்ணறிவு செய்தியாளரை உருவாக்கியுள்ளது.

என்னது இது பெண்ணில்லையா? செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர்! | News Anchor Lisa Introduced By Odisha Tech 09

இதற்கு "லிசா" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது அச்ச அசல் பெண் போலவே உள்ளது. இதைப்பற்றி தெரியாத யாரேனும் லிசாவை பார்த்தால் பெண் என்றே நினைத்து விடுவார்கள். அந்த அளவுக்கு இந்த ஏஐ வடிவமைத்துள்ளனர்.

இந்த லிசா என்கிற ஏஐ அந்த தொலைக்ககியாட்சி நிறுவனத்தல் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு பெண்ணின் உருவைத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

18 மொழிகளை பேசும்

கடந்த மார்ச் மாதம் நம் நாட்டில் ‘சனா’ எனும் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று உருவாக்கி இருந்தது. தொடர்ந்து குவைத்தில் ‘ஃபெதா’ எனும் ஏஐ செய்தி வாசிப்பாளர் அறிமுகமானது. கடந்த 2018-ல் இதே போன்ற முயற்சியை சீனா மேற்கொண்டது.

அங்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பயனர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ‘ரென் சியாரோங்’ எனும் ஏஐ தொகுப்பாளர் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில்தான் தொலைக்காட்சி ஊடகத் துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஓடிவி நிறுவனம், அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், காலத்தின் தேவைக்கு ஏற்பவும் இந்த மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது.

என்னது இது பெண்ணில்லையா? செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர்! | News Anchor Lisa Introduced By Odisha Tech 09

நிஜ செய்தி வாசிப்பாளர்கள் கூட செய்தி வாசிப்பின்போது எங்காவது ஒரு இடத்தில் வார்த்தைகளை தவறாக பயன் படுத்தலாம் ஆனால் லிசா என்ற இந்த ஏஐ எந்த தவறையும் செய்யாது. இந்த ஏஐ தொழில்நுட்ப செய்தி வாசிப்பாளர் தற்போது ஆங்கிலம் மற்றும் ஒடிசா மொழிகளில் செய்தியை வாசிக்கின்றது.

அதுமட்டுமின்றி 18 மொழிகளில் லிசா செய்தி வாசிக்கும் திறமை உள்ளது என்றும் கூறப்படுகிறது. லிசாவால் செய்தி,விளையாட்டு, மொழுதுபோக்கு, நேர்காணல் என எல்லா வகையான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க முடியும்.

தற்போது அந்த தொலைக்காட்சியில் செய்தி மட்டுமே வாசித்து வரும் லிசா இனி வரும் காலத்தில் மற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.