ஆட்டோ மீது மின் அழுத்த கம்பி விழுந்த விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!
ஆந்திராவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது உயர் மின் அழுத்த கம்பி விழுந்ததில் ஆட்டோ தீ பிடித்து எரிந்தது.இதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
பணிக்கு செல்லும்போது விபத்து
இன்று காலை ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் தடிமரி பகுதியில் உள்ள சிலகொண்டையா பல்லி கிராமத்தை சேர்ந்த 8 பேர் விவசாய பணிக்காக ஆட்டோவில் ஏறி சென்றுக்கொண்டிருந்தனர்.
கிராமத்தைக் கடந்து ஆட்டோ சென்றுக்கொண்டிருந்த போது உயர் மின் அழுத்த கம்பி ஒன்று ஆட்டோ மீது விழுந்துள்ளது. இதனால் ஆட்டோ முழுவது மின்சாரம் பாய்ந்து தீ பற்றி எரிந்துள்ளது.
உடல் கருகி உயிரிழந்த சோகம்
தீ வேகமாக பரவியதால் ஆட்டோவில் பயணித்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். தீ முழுவதும் ஆட்டோவில் பரவியதால் ஆட்டோ தீ கரையானது.
இதில் ஆட்டோவில் பயணித்த 8 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இச்சம்வம் பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீட்புக்குழுவினர் உதவியோடு இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிராத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் - தமிழக அரசு அதிரடி..!