தானாக கடலில் மிதந்து வந்த தங்க நிற தேர் - ஆச்சரியத்தில் உறைந்த பொதுமக்கள்!

Andhra Pradesh asani cyclone
By Swetha Subash May 11, 2022 01:07 PM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

ஆந்திர மாநிலம் ஶ்ரீகாகுளம் பகுதியில் தங்க நிற தேர் ஒன்று கடலில் அடித்துவரப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வங்கக் கடலில் உருவான “அசானி” தீவிர சூறாவளி புயல் புயலாக வலுவிழந்த போதிலும், இன்று காலை ஆந்திர கடற்கரையை நெருங்கியது. இதனால் ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு 'ரெட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூறாவளியால் ஆந்திர மாநிலம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் புயல் எதிரொலியாக தேர் ஒன்று கடலில் அடித்துவரப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதனை கண்ட கடலோர பொதுமக்கள் தேரை கயிறு கட்டி கோவிலில் வடம் பிடித்து இழுப்பது போல் அதிர்ச்சியுடன் இழுத்தனர். அருகே வந்த தேர் முழுமையான தேர் அல்ல என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் அழகாக அலங்காரம் செய்து இருந்த அந்த பாதி அளவிலான தேரை காண மக்கள் அனைவரும் கடலோர பகுதியில் திரண்டனர்.

அசானி புயலால் ஆந்திராவில் பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், கடற்கரை அருகே இருக்கும் கோவிலில் இருந்த தேர் இழுத்துவரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தங்க நிறத்தில் உள்ள தேரை கடல் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.