வென்றாக வேண்டிய கட்டாயம்; அதற்கு சிறந்த அணி இந்தியா தான் - எச்சரித்த ஆஸி. கேப்டன்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சேல் மார்ஷ் பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியா தோல்வி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சூப்பர் 8 சுற்றின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் வெறும் 149 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து 150 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை தழுவியது. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா தான்
இந்த போட்டிக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சேல் மார்ஷ் "இன்றைய இரவு எங்களுக்கு சரியாக அமையவில்லை. பிட்ச் விளையாடுவதற்கு எளிதாக இல்லை. ஆனால் 2 அணிகளும் அதில் விளையாடின.
இந்தப் போட்டியில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். தற்போது அடுத்த போட்டியில் நாங்கள் வெல்ல வேண்டியுள்ளது. அதை செய்வதற்கு எங்களுக்கு இந்தியாவை தவிர வேறு எந்த சிறந்த எதிரணியும் இருக்க முடியாது" என்று மறைமுகமாக எச்சரித்துள்ளார்.