கோலியின் சொதப்பலுக்கு காரணம் இதுதான்.. பெரிய ஸ்கோர் அடிக்க முடியல - முன்னாள் வீரர்!

Virat Kohli Cricket Indian Cricket Team Sports T20 World Cup 2024
By Jiyath Jun 23, 2024 11:37 AM GMT
Report

இந்திய அணி வீரர் விராட் கோலி குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். 

விராட் கோலி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றை கடந்து சூப்பர் 8 சுற்றில் விளையாடி வரும் இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

கோலியின் சொதப்பலுக்கு காரணம் இதுதான்.. பெரிய ஸ்கோர் அடிக்க முடியல - முன்னாள் வீரர்! | Akash Chopra About Virat Kohlis Strugle

ஆனால், இந்த தொடரில் நட்சத்திர வீரர் விராட் கோலி சுமாரான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் கவலையை தந்துள்ளது. இதுவரை விளையாடிய போட்டிகளில் 1, 4, 0, 24, 37 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளது ஏமாற்றமாக அமைந்துள்ளது.

வென்றாக வேண்டிய கட்டாயம்; அதற்கு சிறந்த அணி இந்தியா தான் - எச்சரித்த ஆஸி. கேப்டன்!

வென்றாக வேண்டிய கட்டாயம்; அதற்கு சிறந்த அணி இந்தியா தான் - எச்சரித்த ஆஸி. கேப்டன்!

ஆகாஷ் சோப்ரா 

இந்நிலையில் விராட் கோலி குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா "விராட் கோலியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் போனதற்கு அமெரிக்க ஆடுகளங்கள் தான் காரணம்.

கோலியின் சொதப்பலுக்கு காரணம் இதுதான்.. பெரிய ஸ்கோர் அடிக்க முடியல - முன்னாள் வீரர்! | Akash Chopra About Virat Kohlis Strugle

அந்த ஆடுகளங்களில் பேட்டிங் செய்யும்போது அவருக்கு சிரமம் இருந்தது. அதேபோல் தனது பாணியை மாற்றிக்கொண்டு ஆக்ரோஷமாக விளையாட வேண்டுமென தற்போது அவர் விளையாடிய வருகிறார். அப்படி விளையாடுவதால் தான் அவருடைய கூர்மையான ஆட்டத்தை இழந்து அவரால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் போகிறது.

இந்த அணுகுமுறையை மாற்றி வழக்கம் போல் சிறிது நேரம் களத்தில் நின்று, பின்னர் அதிரடியாக விளையாடினால் விராட் கோலியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.