ஔரங்கசீப் நெறியை பின்பற்றுவோருக்கு இதுதான் கதி..யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!
முகலாய மன்னர் ஔரங்கசீப் வழியை பின்பற்றினால் நடவடிக்கை பாயும் என யோகி ஆதித்யநாத் சாடியுள்ளார்.
ஔரங்கசீப் நெறி
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை 7ம் கட்ட தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த சூழலில், இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உத்தரபிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.
அப்போது,காங்கிரஸ் கட்சி மீது ஔரங்கசீப்பின் ஆன்மா ஆட்கொண்டுள்ளதாகவும் இந்தியா முழுவதும் தலிபான் மற்றும் ஷரியா நெறிமுறைகளை அமல்படுத்த காங்கிரஸ் விரும்புவதாக குற்றம்சாட்டியுள்ளார். அதாவது பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை என்பது முஸ்லிம் லீக்கின் ஆவணம்.
ஜிஸ்யா வரிக்கு இணையான வரியை விதிக்க முயல்கிறார்கள். நாட்டில் ஷரியா சட்டத்தை திணிக்கவும், தலிபான் முறையை அமல்படுத்தவும் அவர்கள் விரும்புகிறார்கள். இது நடந்தால், பெண்கள் பள்ளி உட்பட எங்கேயும் செல்ல முடியாது; அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.
யோகி ஆதித்யநாத்
முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் பாதையை பின்பற்றுபவர்கள் தனது புல்டோசர் மூலம் ’கையாளப்படுவார்கள்’ என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோகத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ராமர் இப்போது அயோத்தியில் உள்ள தனது தெய்வீக கோவிலில் அமர்ந்துள்ளார். உலகம் முழுவதும் சனாதன தர்மத்தை பின்பற்றும் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்த போது, காங்கிரஸ் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. அயோத்திக்கான அழைப்பையும் நிராகரித்தது. இப்போதும் கூட, ராமர் கோயில் கூடாது என்னும் அவர்களின் தலைவர்கள்,
ராமருக்கு கோயில் என்பதே பயனற்றது என்றும் கூறுகிறார்கள்.காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியக் கூட்டணியை சீண்டிய யோகி ஆதித்யநாத், அவர்களால் தங்களையே ஒன்றிணைக்க முடியவில்லை. பிறகெப்படி நாட்டை எவ்வாறு ஒருங்கிணைப்பார்கள்? என கேள்வி எழுப்பினார்.
அதிகாரத்திற்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்குவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஓபிசி இடஒதுக்கீடு வழங்க நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா மற்றும் சச்சார் கமிட்டியை அமைத்தார்கள். அவற்றை நாங்கள் அப்போதே எதிர்த்தோம்" என்று கூறியுள்ளார்.