நாட்டில் பெஸ்ட் முதல்வர்கள் இவர்கள்தான்; டாப் இடத்தில் யோகி - அப்போ ஸ்டாலின்?
நாட்டிலேயே சிறந்த முதல்வர்கள் குறித்த சர்வே ஒன்று வெளியாகியுள்ளது.
சிறந்த முதல்வர்கள்
பிரபல ஆங்கில ஊடகம் லோக்சபா தேர்தல் தொடர்பாக சர்வே ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் பெஸ்ட் முதல்வர் யார் என்பது குறித்த லிஸ்டையும் வெளியிட்டுள்ளது.
தொடர்ச்சியாக எட்டாவது முறையாக நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இருக்கிறார். சுமார் 46.3% பேர் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
சர்வே ரிசல்ட்
அடுத்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாவது இடம் பிடித்தாலும் 19.6 சதவீதம் பேர் மட்டுமே அவரை தேர்வு செய்துள்ளனர். தொடர்ந்து மம்தா 8.4% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில், 5.5% ஆதரவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் 4ஆவது இடத்தில் இருக்கிறார்.
மேலும், தங்கள் சொந்த மாநிலங்களில் எந்த முதல்வருக்குச் செல்வாக்கு அதிகம் என்ற கேள்விக்கு 52.7% ஆதரவுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் டாப் இடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் (51.3%), ஹிமந்த பிஸ்வா சர்மா (48.6%) ஆகியோர் டாப் 3 இடங்களில் உள்ளனர்.
நாட்டில் பெஸ்ட் முதல்வர் லிஸ்டில் 2ஆவது இடத்தில் இருந்த கெஜ்ரிவால் இதில் 8ஆவது இடத்தில் உள்ளார். அவருக்கு 36.5% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 35.8% ஆதரவுடனும், மேற்கு வங்க முதல்வர் மம்தா 32.% ஆதரவுடனும் டாப் 10ல் இடம்பெற்றுள்ளனர்.