புளியங்குளத்தில் சாமி தரிசனம் செய்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோவை விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் கோவை புளியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாரதிய ஜனதா கட்சிக்காக பிரச்சாரத்தை தொடங்கினார்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடக் கூடிய அகில இந்திய பாரதிய ஜனதாவின் மகளிர் அணி தலைவியும், வேட்பாளருமான வானதி சீனிவாசனை ஆதரித்து யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிறகு அங்கிருந்து மோட்டார் சைக்கிள் மூலமாக ஊர்வலமாக புலியகுளத்திலுள்ள முந்தி விநாயகர் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கு பாரதிய ஜனதா சார்பாக கோயில் நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து பரிவட்டம் கட்டி வரவேற்பளித்தனர். அங்கு விநாயகரை தரிசனம் செய்துவிட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்த வாகனத்தில் ஏறி ஊர்வலமாக பயணித்து வானதி சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்தார்.
ஊர்வலம் அரசு மருத்துவமனை, திருச்சி சாலை,டவுன் ஹால், வழியாக பிரச்சார மேடையான தேர் முட்டியை அடைந்தது.
வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது விழா மேடையில் அவர் வானதி சீனிவாசனுக்காக ஆதரவு திரட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.