சகல தோஷங்களையும் நீக்கும் மகா சனி பிரதோஷம் - எப்போது தெரியுமா?
வரும் ஆகஸ்ட் 31ல் சனி பிரதோஷ நாளில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்.
பிரதோஷ மகிமை
ஒரு ஆண்டிற்கு 12 பிரதோஷ தினங்கள் வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலமே பிரதோஷ காலமாகும்.
பிரதோஷத்தன்று சிவ பெருமானையும், நந்தி தேவரையும் வழிபடுவதால் சகல விதமான தோஷங்களும், பாவங்களும், துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.பிரதோஷங்களில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை மகா சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
சனி பிரதோஷம்
சனி பிரதோஷம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி அதிகாலை 2.25 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 1ஆம் தேதி அதிகாலை 3.40 மணிக்கு பிரதோஷம் முடிவடையும். பிரதோஷ காலத்தின்போது வழிபட வேண்டிய பிரதோஷ விரதம் முக்கியமானது.
அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம்,புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் எனது ஐதீகம்.
பலன்கள்
பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும்.