வெடிக்கும் வன்முறை; ட்ரோன் மூலம் தாக்குதல் - ஊரடங்கு அமல்!
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்து வருகிறது.
மணிப்பூர்
மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி மக்கள் இடையான வன்முறை தீவிரமாகியிருக்கிறது. ஜிரிபாம் மாவட்டத்தில் டந்த சண்டையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வாரத் தொடக்கத்தில் மேற்கு இம்பாலில் ட்ரோன் மூலம் குண்டுகள் போடப்பட்டு நடந்த தாக்குதலில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இதனால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
வெடிக்கும் வன்முறை
ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு (COCOMI) காலவரையற்ற "பொது அவசரநிலையை" அறிவித்துள்ளது. குக்கி ஆயுதக்குழுக்களின் இடைவிடாத தாக்குதலைச் சுட்டிக்காட்டி மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளது. இயல்புநிலைத் திரும்பும் வரை இந்த அவசரநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் பிரேன் சிங் பேசுகையில், "மணிப்பூர் அரசு இந்த தான்தோன்றி தாக்குதல்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. பழங்குடி மக்கள் மீதான இந்தத் தீவிரவாத தாக்குதல்களுக்கு முறையான பதிலடி வழங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.