மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் முழு பலத்துடன் எழுப்புவோம் - ராகுல் காந்தி!

Indian National Congress Rahul Gandhi India Manipur
By Jiyath Jul 12, 2024 02:01 AM GMT
Report

மணிப்பூரில் அமைதியின் அவசியத்தை நாடாளுமன்றத்தில் முழு பலத்துடன் எழுப்புவோம் என்று எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.   

ராகுல் காந்தி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "வன்முறை வெடித்ததில் இருந்து நான் மணிப்பூருக்கு 3 முறை சென்றிருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் முழு பலத்துடன் எழுப்புவோம் - ராகுல் காந்தி! | Manipur Issue In Parliament Rahul Gandhi

இன்றும் மாநிலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வீடுகள் எரிகின்றன. அப்பாவிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வாழத் தள்ளப்படுகின்றனர்.

இந்த அரசாணையை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்!

இந்த அரசாணையை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்!

அமைதியின் அவசியம் 

பிரதமர் மணிப்பூருக்கு நேரில் சென்று, அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அமைதியை ஏற்படுத்த வேண்டும். இந்த அவலத்திற்கு முடிவு கட்ட மற்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் கட்சியும்,

மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் முழு பலத்துடன் எழுப்புவோம் - ராகுல் காந்தி! | Manipur Issue In Parliament Rahul Gandhi

இந்தியா கூட்டணி கட்சிகளும் மணிப்பூரில் அமைதியின் அவசியத்தை நாடாளுமன்றத்தில் முழு பலத்துடன் எழுப்பும்" என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.