மனைவி டெலிவரி அப்போ அந்த நடிகர் செஞ்சதை மட்டும் மறக்கவே மாட்டேன் - அசின் கணவர்

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகை அசின் கணவர் உருக்கமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
நடிகை அசின்
போக்கிரி, சிவகாசி, தசாவதாரம் என தமிழில் பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை அசின். ஹிந்தியில் ரெடி, கிலாடி 786 மற்றும் ஹவுஸ்ஃபுல் 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
2016ல், மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை மணந்து கொண்டார். அதன்பின் சினிமாவை விட்டு விலகினார். 2017ல் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அவரது பெயர் ஆரின். அவ்வப்போது தனது மகள் குறித்த வீடியோ காட்சிகளை பகிர்ந்து வருவார்.
கணவர் தகவல்
இந்நிலையில் ஷிகர் தவானின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் சர்மா, என் மகள் பிறக்கும் நேரத்தில் அக்ஷய் குமார் அடிக்கடி எனக்கு போன் செய்து குழந்தை பிறந்ததும் சொல்லுங்கள் என தெரிவித்தார். கண்டிப்பாக சொல்கிறேன் என்றேன். குழந்தை பிறந்ததும் அவருக்கு தான் முதலில் போன் செய்தேன்.
பிரதர் குட் நியூஸ் என்றேன், அவரோ ஃபென்டாஸ்டிக் என்றார். அசினுக்கு குழந்தை பிறந்ததும் கொச்சிக்கு வர விமானத்தை தயாராக வைத்திருந்தார் அக்ஷய் குமார். என் குடும்பத்தார் வந்து சேரும் முன்பே அக்ஷய் வந்துவிட்டார்.
அதை என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன். என் வாழ்க்கையில் ஏதாவது பெரிதாக செய்வதாக இருந்தால் நீங்கள் எனக்கு பக்கத்திலேயே இருக்கிறீர்கள் என்கிற தைரியத்தில் செய்வேன் என்றார் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ராகுல் சர்மாவும், அசினும் விவாரத்து பெறப் போவதாக செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.