தகாத உறவில் அசினின் கணவர், விவாகரத்து? - விளக்கமளித்த நடிகை!

Asin Tamil Cinema
By Vinothini Jun 29, 2023 04:51 AM GMT
Report

 பிரபல நடிகை அசினின் கணவர் தகாத உறவில் இருந்ததால் விவாகரத்து ஆனது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை அசின். இவர் இயக்குநர் ஜீவாவின் உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசின். அந்தப் படம் தாமதமாக நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் முதலில் வெளியானது.

asin-opens-about-her-divorce

பின்னர் அவர் நடித்த கஜினி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன்பிறகு இவர் பல படங்களில் நடித்தார் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

விவாகரத்து

இந்நிலையில், இவர் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் நடிகை அசின் தனது கணவரை விவாகரத்து செய்துகொள்ளவிருப்பதாக தகவல் பரவிவருகிறது.

asin-opens-about-her-divorce

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அவரது பதிவில், ''கோடை விடுமுறைக்கு மத்தியில் காலை உணவை இருவரும் சேர்ந்து ருசித்து சாப்பிடும்போது கற்பனையான எந்த ஆதாரமும் இல்லாத செய்தி வந்தது.

நாங்கள் வீட்டில் ஒன்றாக எங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து திருமணம் குறித்து திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது நாங்கள் பிரிந்துவிட்டதாக சொன்ன காலத்தை நினைத்து பார்க்கிறேன். இன்னும் சிறப்பாக யோசியுங்கள். (5 நிமிடங்கள் வீணானது ஒன்றைத் தவிர எங்களுக்கு கொண்டாட்டமான விடுமுறை)'' என்று குறிப்பிட்டுள்ளார்.