சினிமாவை விட்டு காணாமல் போன நடிகை அசின் - கணவருடன் விவாகரத்து?

Asin Gossip Today Divorce
By Sumathi Jun 27, 2023 05:30 PM GMT
Report

நடிகை அசின் கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

நடிகை அசின் 

போக்கிரி, சிவகாசி, தசாவதாரம் என தமிழில் பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை அசின். ஹிந்தியில் ரெடி, கிலாடி 786 மற்றும் ஹவுஸ்ஃபுல் 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 2016ல், மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை மணந்து கொண்டார்.

சினிமாவை விட்டு காணாமல் போன நடிகை அசின் - கணவருடன் விவாகரத்து? | Actress Asin And Rahul Sharma Got Divorce

அதன்பின் சினிமாவை விட்டு விலகினார். 2017ல் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அவரது பெயர் ஆரின். அவ்வப்போது தனது மகள் குறித்த வீடியோ காட்சிகளை பகிர்ந்து வருவார். இந்நிலையில், அசினுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

விவாகரத்து?

மேலும், ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை அசின் கண்டித்தும் அவர் கண்டுக்கொள்ளாமல் இருந்ததாக இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் கணவருடனான புகைப்படங்களையும் அசின் நீக்கியுள்ளார்.

சினிமாவை விட்டு காணாமல் போன நடிகை அசின் - கணவருடன் விவாகரத்து? | Actress Asin And Rahul Sharma Got Divorce

தற்போது, தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் அசின் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.