ஒரு தவறால் முடிந்த கேரியர் - அஸ்வினுக்கு இனி வாய்ப்பே இல்லை?
டெஸ்ட் தொடரில் அஸ்வினுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.
டெஸ்ட் தொடர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்த தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில் அதில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அடுத்து இரண்டாவது போட்டி டிசம்பர் 6 அன்று நடைபெறவுள்ளது. முன்னதாக இரண்டு நாட்கள் பயிற்சிப் போட்டி நடைபெற்றது. அதிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அஸ்வின் ஆட்டம்
இதன் மூலம், வாஷிங்டன் சுந்தர் இந்த ஆஸ்திரேலியா தொடரில் முதன்மை ஸ்பின்னர் ஆக இருக்கப் போகிறார் என்பது உறுதியாகிறது. அஸ்வின், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்பது தான் அஸ்வினை புறக்கணிக்க காரணம் என கூறப்படுகிறது.
ஒரு போட்டியில் இரண்டு ஸ்பின்னர்கள் வேண்டுமென்ற நிலை ஏற்பட்டாலும் இரண்டாவது ஸ்பின்னர் ஆக ரவீந்திர ஜடேஜா தான் அணியில் இடம் பெறுவார் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.