தங்க மங்கை பி.வி.சிந்துவிற்கு திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா?
பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு திருமணம் டிசம்பர் 22 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
பி.வி.சிந்து
ஒலிம்பிக்கில் 2 முறை தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து.
உலக சாம்பியன் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண், 1983 க்கு பிறகு ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
திருமணம்
இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை பி.வி.சிந்து திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களது திருமணம் உதய்பூரில் வரும் டிசம்பர் 22ஆம் தேதி நடைப்பெற உள்ளது. அதை தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி டிசம்பர் 22ஆம் தேதி நடைப்பெற உள்ளது.
வெங்கட தத்தா சாய் ஹைதராபாத்தை தளமாக கொண்ட போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இரண்டு குடும்பங்களும் ஏற்கனவே ஒருவரையொருவர் அறிந்திருந்தாலும், ஒரு மாதத்திற்கு முன்புதான் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் முடிவானதாக பி.வி.சிந்துவின் தந்தை தெரிவித்துள்ளார்.