அஸ்வின் திடீர் ஓய்வு அறிவிப்பு.. வன்மத்தைக் கக்கிய கம்பீர், ரோஹித் - வெளியான தகவல்!
அஸ்வின் மீது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் வன்மத்தைக் கக்கிவிட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அஸ்வின்
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்களையும் 3503 ரன்களையும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 6 சதம் மற்றும் 14 அரைசதங்களை அடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது . இந்த சூழலில் ,இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வன்மம்
106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய ஜாம்பவானுக்குச் சொந்த மண்ணில் ஃபேர்வெல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். மேலும் பிசிசிஐ மிக சாதாரணமாக ஓய்வுக்கு அனுமதித்துள்ளது.
அஸ்வின் மீது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் வன்மத்தைக் கக்கிவிட்டதாகவும், ஆஸ்திரேலியா தொடரில் வாய்ப்பு அளிக்காததாலேயே அஸ்வின் ஓய்வை அறிவித்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.