சச்சினின் அந்த ஸ்டைலைப் விராட் கோலி பின்பற்ற வேண்டும் - ரகசியத்தை சொன்ன கில்கிறிஸ்ட்!
சச்சின் ஸ்டைலைப் விராட் கோலி பின்பற்றினால் மீண்டும் அதிக ரன் குவிக்கலாம் என கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
சச்சின் ஸ்டைல்
ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இந்தியாவிற்குப் பதிலடி கொடுத்துள்ளது.
இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணி அடுத்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. மேலும் ஆஸ்திரேலியா - இந்தியா இரு அணிகளுக்கு இடையிலான 3வது போட்டி வரும் 14ம் தேதி காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் சச்சின் ஸ்டைலைப் விராட் கோலி பின்பற்றினால் மீண்டும் அதிக ரன் குவிக்கலாம் என கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகப்பெரிய ஸ்கோர் என்பது உங்களை நோக்கி வீசும் பந்துவீச்சாளர்களிடம் இருந்து வருவது கிடையாது.
விராட் கோலி
நாம் பேட்டிங்கை திறமையில் வெளிப்படுத்துவதில் கிடைப்பது தான் மிகப்பெரிய ஸ்கோர்.குறிப்பாக சொல்லப்போனால் 2004ம் ஆண்டு சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சச்சின் பந்துகளை வீணடிக்காமல் 241 ரன்கள் குவித்தாரோ
அதே போன்று விராட் கோலியும் பந்தை வீணடிக்காமல் தனக்கு நேராக வரும் பந்துகளை அடித்து விளையாடினால் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க முடியும் என்று கூறினார்.