சர்வதேச கிரிக்கெட்டில் தாக்கு பிடிக்க முடியாது; பாதுகாப்பில்லாத உணர்வு - அஸ்வின் பரபர பேட்டி!
பாதுகாப்பில்லாத உணர்வுடன் இருந்ததாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ind-vs-eng
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்திய அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் வெற்றிக்கு பின் பேசிய அஸ்வின், எனது உணர்வினை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. 100வது டெஸ்ட் போட்டிக்காக பலரும் வாழ்த்து கூறினார்கள். இந்த டெஸ்ட் தொடரை பொறுத்த வரைக்கும் வெவ்வேறு பவுலிங் ஆக்ஷன், வெவ்வேறு ஸ்பீட் மற்றும் ரிலீஸை செயல்படுத்தினேன்.
அஸ்வின் பேட்டி
சில நேரங்களில் என் அதீத முயற்சிகள் எனக்கு பாதுகாப்பில்லாத உணர்வை கொடுத்தது. மக்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்தேன். எப்போது ஆலோசனைகளுக்காகவும், விமர்சனங்களுக்காகவும் காதுகளை திறந்தே வைத்தேன்.
ஆனால் என் மனதில், எந்த முயற்சியையும் செய்யாமல் எதையும் கற்று கொள்ள முடியாது என்று தெரியும். சமகால கிரிக்கெட்டில் ஏராளமான வீடியோக்கள், அனாலிஸிஸ்-கள் செய்யப்படுகிறது. அதனால் பேட்ஸ்மேன்கள் எங்களை எளிதாக எதிர்கொள்ள முடியும். அதனால் ஒரேயொரு விஷயத்தை வைத்து சர்வதேச கிரிக்கெட்டில் தாக்கு பிடிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.