டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் - சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்!

Ravichandran Ashwin Cricket India Indian Cricket Team Sports
By Jiyath Feb 16, 2024 10:31 AM GMT
Report

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

அஸ்வின் சாதனை

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த இவர் இந்திய அணியில் பந்து வீச்சாளராக மட்டுமல்லாமல், ஒரு பேட்ஸ்மேனாகவும் தனது வருகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் - சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்! | Ravi Ashwin Takes 500 Wickets In Test Cricket

இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டை வீழ்த்தி அவர் சாதனை படைத்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சாதிக்க வயது தடையல்ல.. 44 வயதில் 500 டி20 விக்கெட்டுகள் - CSK வீரர் சாதனை!

சாதிக்க வயது தடையல்ல.. 44 வயதில் 500 டி20 விக்கெட்டுகள் - CSK வீரர் சாதனை!

இரண்டாவது வீரர்

இதன் மூலம் இந்திய வீரர் கும்ளேவுக்கு அடுத்து 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.  இங்கிலாந்து வீரர் ஜாக் கார்வ்லேவை வீழ்த்தி தனது 500-வது விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் - சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்! | Ravi Ashwin Takes 500 Wickets In Test Cricket

மேலும், இது அவரது 98-வது டெஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு இந்திய வீரர்கள், ராசிகாரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.