WTC வரலாற்றில் முதல் இந்தியா வீரர்..மாபெரும் சாதனை படைத்த அஸ்வின்..!
நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
கிரிக்கெட் ரசிகர்களை கவர, கிரிக்கெட் சம்மேளனம் டெஸ்ட் போட்டிகளில் உலக கோப்பையை அறிமுகப்படுத்தியது. இதுவரை இரண்டு உலக கோப்பை டெஸ்ட் தொடர்கள் நடந்துள்ள நிலையில், இரண்டிலும் இந்திய அணி இறுதியில் தோல்வியை சந்தித்தது.
இந்திய அணி தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் கோலோச்ச சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பங்கு மிக பெரியது. இந்த format'இல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அஸ்வின், மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
அஸ்வின் சாதனை
அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
அஸ்வினுக்கு ,முன்பாக ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மற்றும் நேதன் லயன் இருவரும் தலா 169 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர். இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 119/1 ரன்களை எடுத்துள்ளது.