திருமணம் முடிந்ததும் கெஜ்ரிவால் சொன்ன அந்த வார்த்தை இதுதான் - மனைவி உருக்கம்!
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா உருக்கமாக சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது
குஜராத், பவ்நகரில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தனது கணவர் அர்விந்த் கெஜ்ரிவால் வலுக்கட்டாயமாக 40 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை நடப்பதால் சிறையில் வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், 10 ஆண்டுகள் விசாரித்தால் அதுவரை சிறையில் வைத்திருப்பீர்களா?
மனைவி உருக்கம்
நன்கு படித்த, தேசபக்தியுள்ள உண்மையான நபர் தனது கணவர். சமூக சேவைக்காகவே தனது வேலையை விட்டுவிட்டு ஏழை மக்களுடன் குடிசைகளுக்கு சென்றேன். சமூக சேவை செய்யப்போகிறேன்.
ஏதாவது ஆட்சேபம் இருக்கிறதா என்று மட்டுமே தங்கள் திருமணம் முடிந்த உடன் கெஜ்ரிவால் தன்னிடம் கேட்டதாக உருக்கமாக பகிர்ந்துள்ளார்.