கெஜ்ரிவால் கைது; அவர் ஒரு சிங்கம், நீண்ட நாள் சிறையில் அடைக்க முடியாது - சுனிதா கெஜ்ரிவால்!

Aam Aadmi Party Delhi Arvind Kejriwal
By Swetha Apr 01, 2024 04:30 AM GMT
Report

கெஜ்ரிவால் ஒரு சிங்கம்; அவரை சிறையில் அடைக்க முடியாது என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

கெஜ்ரிவால் கைது

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். கைதானாலும் அவர் தான் முதல்வராகத் தொடர்வார் என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது சிறையில் இருந்தபடியே கெஜ்ரிவால் உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். 

கெஜ்ரிவால் கைது; அவர் ஒரு சிங்கம், நீண்ட நாள் சிறையில் அடைக்க முடியாது - சுனிதா கெஜ்ரிவால்! | Kejriwal Is A Lion He Cant Be Jailed Sunita

இந்நிலையில், கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, திருச்சி சிவா, திருமாவளவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா மற்றும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனாவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கெஜ்ரிவால் கைது; காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் எல்லாம் தெரியும் - எகிறும் அமெரிக்கா!

கெஜ்ரிவால் கைது; காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் எல்லாம் தெரியும் - எகிறும் அமெரிக்கா!

சுனிதா கெஜ்ரிவால்

அப்போது கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம்; அவரை சிறையில் அடைக்க முடியாது. கோடிக்கணக்கான மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம். இந்திய மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்கிறார்கள். நாங்கள் இன்று வாக்கு கேட்கவில்லை.

கெஜ்ரிவால் கைது; அவர் ஒரு சிங்கம், நீண்ட நாள் சிறையில் அடைக்க முடியாது - சுனிதா கெஜ்ரிவால்! | Kejriwal Is A Lion He Cant Be Jailed Sunita

புதிய இந்தியாவை உருவாக்க 140 கோடி இந்தியர்களை அழைக்கிறோம் என தெரிவித்தார். இதை தொடர்ந்து, சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்காக எழுதிய கடிதத்தை சுனிதா கெஜ்ரிவால் அனைவரது முன் படித்து காண்பித்தார்.

அதில், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன.

  • நாடு முழுமைக்கும் 24 மணி நேர மின்சார வசதி.
  • ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம்.
  • அனைத்து கிராமங்களிலும் சிறந்த அரசு பள்ளிகள் அமைக்கப்படும்.
  • டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது போல் அனைத்து கிராமங்களிலும் மொஹல்லா மருத்துவமனை அமைக்கப்பட்டு, இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
  •  எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தது போல விவசாயிகளுக்கு சரியான விலை வழங்குதல்.
  • டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.