மோடி மட்டும் இதை செய்தால்.. நானே பாஜகவுக்கு பிரச்சாரம் செய்வேன் - கெஜ்ரிவால் சவால்!

Narendra Modi Delhi Arvind Kejriwal
By Sumathi Oct 07, 2024 06:43 AM GMT
Report

மோடிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய தயார் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 அரவிந்த் கெஜ்ரிவால்

வடக்கு டில்லியில் உள்ள சாத்ரசால் மைதானத்தில் இரண்டாவது 'ஜனதா கி அதாலத்' என்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

modi - arvind kejriwal

இதில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் சவால், பாஜகவின் இரட்டை இன்ஜின் மாடல் அரசு என்பது இரண்டுபக்கமும் கொள்ளையடிக்கவும், இரண்டு பக்கம் ஊழல்செய்யவும் மட்டுமே உதவுகிறது.

நாங்களும் இதை செய்வோம்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு

நாங்களும் இதை செய்வோம்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு

 இலவச மின்சாரம்? 

நான் பிரதமர் மோடிக்கு நேரடியாகவே சவால் விடுக்கிறேன். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் பிப்ரவரிக்குள்ளாக நீங்கள் ஆட்சி செய்யும் 22 மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டால் பாஜகவுக்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்காகவும் நான் பிரச்சாரம் செய்ய தயார்.

மோடி மட்டும் இதை செய்தால்.. நானே பாஜகவுக்கு பிரச்சாரம் செய்வேன் - கெஜ்ரிவால் சவால்! | Arvind Kejriwal Ready To Campaign For Pm Modi

இதனை செய்ய அவர்கள் தயாரா? பாஜக எப்போதுமே ஏழைகளுக்கு எதிரான அரசாகவே செயல்பட்டு வருகிறது. பஸ் மார்ஷல் மற்றும் டேட்டா என்ட்ரிஆபரேட்டரகள் நீக்கப்பட்டதே அதற்கு சான்று.

துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி அரசில் ஜனநாயகம் என்பதே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.