நாங்களும் இதை செய்வோம்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு மற்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜரிவால் பாராட்டு
பாஜக ஆளாத மாநிலங்களில் சட்ட மசோதாக்கள் மீதான தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி, பாஜக ஆளாத அனைத்து மா நிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டுகள் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போல் டெல்லி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றவுள்ளதாக கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை கூடவுள்ளது .
கடந்த 10 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கெடுவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.