வனிதா ஒரு துரோகி; குடும்ப மானத்தை வாங்குறா - விளாசிய அருண் விஜய்!
வனிதா குறித்து அருண் விஜய் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா
நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சிறிய வயது முதலே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சந்திரலேகா எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் மகளை இவர் வைத்துக் கொண்டு மகன் தந்தையுடன் வசித்து வருகிறார்.
அதன்பின் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை. இதற்கிடையில் சினிமாவில் இருந்து விலகியிருந்த வனிதா பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தார்.
கொந்தளித்த அருண் விஜய்
தொடர்ந்து, தன்னுடைய தந்தையின் செயல்பாடுகள் குறித்து மோசமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசியுள்ள அருண் விஜய், வனிதா ஒரு துரோகி அவர் என்னுடைய தந்தையின் பேச்சை கேட்கவில்லை. அதனால் தான் இப்படி இருக்கிறார்.

நாங்கள் எங்களுடைய தந்தையின் பேச்சை கேட்டு தற்போது நல்ல நிலையில் இருக்கிறோம்.வனிதா எப்படிப்பட்டவர் அவருக்கு சுயபுத்தி எப்படி இருக்கிறது. அவருடைய செயல்பாடுகள் எந்த அளவு தரம் கெட்டதாய் உள்ளது என்பதை இந்த உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.
தன்னுடைய தனிப்பட்ட மோசமான செயல்பாடுகள் மற்றும் தவறான புத்தி காரணமாக தான் வனிதா என்று இந்த நிலைமையில் இருக்கிறார். அவரின் நிலைமைக்கு காரணம் நாங்கள் தான் என்று எங்கள் மீது பழி போட்டுக் கொண்டிருக்கிறார்.
எங்களுடைய அப்பா குறித்து வனிதா பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil