லீவுக்கு வந்த ராணுவ வீரர்.. திட்டமிட்டு தாக்கிவிட்டு முதுகில் PFI என்று எழுதிய மர்ம கும்பல் - அதிர்ச்சி!

Kerala Indian Army
By Vinothini Sep 26, 2023 06:13 AM GMT
Report

ராணுவ வீரரை தாக்கிய மர்ம கும்பல் அவரது முதுகில் PFI என்று எழுதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல்

கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் வசித்து வருபவர் ஷைன் குமார், இவர் இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (EME) கார்ப்ஸில் பணிபுரிந்து வருகிறார். இவர் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்திருந்தார்.

army-man-attacked-and-written-pfi-in-his-back

அப்பொழுது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கடக்கலில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் மர்ம நபர்கள் இவரை காட்டிற்குள் அழைத்து தாக்கியுள்ளனர்.

ஆத்திரத்தில் மருத்துவ மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் - கொடூரம்!

ஆத்திரத்தில் மருத்துவ மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் - கொடூரம்!

மர்ம கும்பல்

இந்நிலையில், அந்த ராணுவ வீரர் போலீசிடம் "பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, வீட்டின் அருகே சிலர் நிற்பதைப் பார்த்தேன். அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் யாரோ ஒருவர் குடிபோதையில் படுத்துக் கிடப்பதாகவும், அந்த நபரை உங்களுக்குத் தெரியுமா என்றும் கேட்டார்கள்" என்று புகாரில் கூறியுள்ளார்.

army-man-attacked-and-written-pfi-in-his-back

அப்பொழுது அவர்களுடன் ரப்பர் தோட்டத்திற்குச் சென்றதாகவும், அங்கு சென்றதும், யாரோ அவரை பின்னால் இருந்து உதைத்து, கைகளைக் கட்டி, அவரை அடித்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். அப்போது அவர்கள் ஷைன் குமாரின் முதுகில் ‘PFI’ என்று எழுதியிருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர். இந்த PFI இயக்கம் கடந்த ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.