அதிர்ச்சி சம்பவம் : ஆண் நண்பரை தாக்கி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்!
கணவரை இழந்து தனியாக வசித்துவந்த பெண்ணை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் அன்பு நகரில் 29 வயது பெண் ஒருவர் கணவர் இறந்துவிட்டதால் அப்பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மே 19-ம் தேதி தன் ஆண் நண்பருடன் ஒரு பகுதியில் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு நான்கு பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர். அந்த கும்பல் அந்த பெண் மற்றும் அவரின் ஆண் நண்பருடன் தகராறு செய்ததாக தெரிகிறது.
மேலும், அந்த பெண்ணின் ஆண் நண்பரை மிரட்டியும் தாக்கியும் அவரை கட்டி போட்டு விட்டு பெண்ணை தனியாக அழைத்து சென்று நான்கு பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அத்துடன் அவர் அணிந்து இருந்த தங்க சங்கிலி மற்றும் அவரிடம் இருந்த 7000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வீசாணம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார்(20), நவீன் குமார்(21) மற்றும் முரளி(21) ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த குற்றச் செயலில் தொடர்புடைய வல்லரசு என்பவர் தலைமறைவாக உள்ளதால் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.