அந்த நடிகையை தான் காதலிக்கிறேன்? மெளனம் உடைத்த அர்ஜூன் தாஸ்!
நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடனான உறவு குறித்து அர்ஜூன் தாஸ் விளக்கமளித்துள்ளார்.
அர்ஜூன் தாஸ்
கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற சில படங்களில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து குறுகிய காலத்திற்குள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் அர்ஜுன் தாஸ்.

இவர்கள் பெண் ரசிகைகள் அதிகம். தொடர்ந்து, ஐஸ்வர்யா லக்ஷ்மி உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது.
தற்போது, மௌனகுரு படம் புகழ் சாந்தகுமார் இயக்கியிருக்கும் ரசாவதி படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். அந்த படம் மே 10ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.
ஐஸ்வர்யா லட்சுமியுடன் காதல்?
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் தாஸ், கடந்த ஆண்டு ஒரு படத்திற்காக நானும், ஐஸ்வர்யா லட்சுமியும் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டோம்.

உடனே நானும், அவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேச்சு கிளம்பியது. அவர் என் நெருங்கிய தோழி. அவ்வளவு தான். எங்களுக்கு இடையே காதல் எல்லாம் இல்லை.
சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. அதனால் என் திருமணத்திற்கு இப்போ அவசரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil