பிரியும் அடுத்த பிரபல ஜோடி...ஹர்திக் பாண்டியா – நடாசா உறவில் விரிசல்? வெளியான ஷாக் தகவல்!
ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியா – நடாசா
அண்மை காலமாக சினிமா, கிரிக்கெட் என பிரபல ஜோடிகள் பலரும் விவாகரத்து பெற்றுக் கொள்வது வழக்கமாகி வருகிறது. அந்த பட்டியலில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 4ல் வெற்றியும், 10ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.இதனால் அவரது தலைமை சரியில்லை என நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா இருவரும் பிரிய இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவிற்கும், பாலிவுட் நடிகையான நடாசா ஸ்டோன்கோவிச்சுக்கும் திருமணம் முடிந்தது. வர்களுக்கு அகஸ்தியா என்ற ஒரு மகன் உள்ளார்.
உறவில் விரிசல்?
தற்போது இவர்கள் இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதாகவும், இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதகாவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி வருகிறது. அதாவது இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிங்கிள் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருவது கவனிக்கப்பட்டது.
குறிப்பாக இன்ஸ்டாவில் நடாசா ஸ்டான்கோவிச் பாண்டியா என்று பெயர் வைத்திருந்த நிலையில், தற்போது பாண்டியாவை நீக்கிவிட்டு வெறும் நடாசா ஸ்டான்கோவிச் என்று மாற்றியுள்ளார். அதோடு, ஹர்திக் பாண்டியா தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நடாசா நீக்கியுள்ளார்.
இதில், அகஸ்தியா ஹர்திக் பாண்டியா உடன் இருக்கும் புகைப்படங்களை எல்லாம் அவர் நீக்கியுள்ளார்.இந்த தகவல் அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.