மகன் முன்னிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு நடந்த திருமணம்...! வைரலாகும் புகைப்படம்...!

Hardik Pandya Marriage Viral Photos
By Nandhini Feb 15, 2023 12:40 PM GMT
Report

நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சும் நேற்று (காதலர் தினத்தில்) உதய்பூரில் திருமணத்தை நடத்தி முடித்தனர்.

ஹர்திக் பாண்டியா திருமணம் -

கிரிக்கெட் வீரர் பாண்டியா, பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை மும்பை நீதிமன்றத்தில் 2020ம் ஆண்டு மே 31ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது ஹர்திக் பாண்டியா மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியவும், நடாஷாவும் காதல் தினத்தை முன்னிட்டு மீண்டும் திருமணம் செய்ய திட்டமிட்டனர். 

இவர்கள் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டதால் நட்சத்திர ஜோடி பிரமாண்டமான திருமண கொண்டாட்டம் எதுவும் நடத்தவில்லை.

இந்த திருமண விழா கடந்த 13ம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது. இத்திருமண விழாவில், ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் போன்ற திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மிகவும் உற்சாகமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

hardik-pandya-natasa-stankovic-wedding

ஹர்திக் பாண்டியாவும், நடாசாவிற்கு மீண்டும் திருமணம்

இந்நிலையில், நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சும் நேற்று (காதலர் தினத்தில்) உதய்பூரில் ஒரு வெள்ளை திருமணத்தை நடத்தி முடித்தனர்.

இது தொடர்பான புகைப்படங்களை ஹர்திக் மற்றும் நடாசா காதலர் தினத்தின் சிறப்பு கொண்டாட்டமாக தங்களது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அந்த பதிவில், 3வருடங்களுக்கு முன் எடுத்த சபதத்தை புதுப்பித்து இந்த காதல் தீவில் காதலர் தினத்தை கொண்டாடினோம். எங்கள் அன்பைக் கொண்டாட எங்களுடன் எங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் இருப்பது உண்மையில் நாங்கள் பாக்கியவான்கள் என்று பதிவிட்டுள்ளனர். 

இந்த பிரமாண்ட விழாவில் மகன் அகஸ்தியா உட்பட தம்பதியரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். உதயர்பூரில் நடைபெற்ற பிரமிக்க வைக்கும் விழாவில், ஹர்திக் கருப்பு நிற டக்ஷீடோ அணிந்திருப்பதையும், நடாஷா வெள்ளை நிற கவுன் அணிந்திருப்பதையும் காணலாம்.

இவர்களது மகன் அகஸ்தியர் வெள்ளை சட்டையும் கருப்பு நிற உடையும் அணிந்துள்ளார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹர்திக் பாண்டியாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.