அடுத்த பிரபல ஜோடிக்கு விவாகரத்து? மனைவியின் பெயர் டாட்டூவை அழித்த நடிகர்!
பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான் கையில் இருந்த 'கரீனா' டாட்டூ மாற்றப்பட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
பிரபல ஜோடி
பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானும், நடிகை கரீனா கபூரம் காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தைமூர், ஜே என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். சயிஃப் அலி கானின் முதல் திருமணத்தில் அவருக்கு சாரா என்கிற மகளும், இப்ராஹிம் என்கிற மகனும் இருக்கிறார்கள்.
சயிஃப் அலிகான் கரீனாவை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது இடதுகையில் மனைவியின் பெயரை டாட்டூவாகப் பதிந்திருந்தார். இது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம். இந்த நிலையில், சயிஃப் இப்போது தனது ’கரீனா’ டாட்டூவை மாற்றியிருக்கிறார்.
பெயர் டாட்டூ
அதாவது, ‘கரீனா’ என்ற பெயரில் இருந்து திரிசூல வடிவத்திற்கு அந்த டாட்டூவை மாற்றி இருக்கிறார். இதுதான் பாலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்து வாழ்கிறார்களா என்றும், விரைவில் விவாகரத்து பெறுகிறார்களோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால், சயிஃப் வட்டாரத்தில் இது ஒரு படத்திற்காக அவர் மாற்றிய தற்காலிக டாட்டூ என்று சொல்லி வருகின்றனர். ஆனால், இது குறித்து சயிஃப்- கரீனா இருவரும் மெளனம் காத்து வருவது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: படமெடுத்து கோபத்தை வெளிப்படுத்திய பாம்பு... சாமர்த்தியமாக பிடித்து மிரட்டிய நபர் Manithan

Siragadikka Aasai: நிறுத்துங்க அம்மா ரோகினியை அடிக்காதீங்க... பழியை தன் மீது சுமத்திய மனோஜ் Manithan
