விஜய் டிவியிலிருந்து விலகிய அறந்தாங்கி நிஷா - அவரே போட்ட பதிவு!

Star Vijay Aranthangi Nisha
By Sumathi Sep 30, 2024 06:00 PM GMT
Report

விஜய் டிவியில் இருந்து அறந்தாங்கி நிஷா விலகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

அறந்தாங்கி நிஷா

விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

aranthangi nisha

தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு மக்கள் மனதில் நீடித்தார். பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் வலம் வருகிறார்.

அறந்தாங்கி நிஷாவிற்கு இவ்வளவு சம்பளமா - ரகசியம் உடைத்த ராமர்!

அறந்தாங்கி நிஷாவிற்கு இவ்வளவு சம்பளமா - ரகசியம் உடைத்த ராமர்!

விஜய் டிவியில் விலகல்?

சின்னத்திரையில் மட்மன்றி ஆண் தேவதை, கோலமாவு கோகிலா , திருச்சிற்றம்பலம், ஜெயிலர், ராயன் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், நிஷா விஜய் டிவியில் இருந்து விலகி விட்டார் என்று தகவல் பரவி வந்தது.

விஜய் டிவியிலிருந்து விலகிய அறந்தாங்கி நிஷா - அவரே போட்ட பதிவு! | Aranthangi Nisha Post About Quitting Vijay Tv

இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நிஷா, யாரு பார்த்த வேலை சாமி இது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தேன் டா.. உங்களால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்டு இருக்கீங்க.. hiyooooo என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.