அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர்; புதியவர்க்கு வாய்ப்பா? பரபர தகவல்

Tamil nadu DMK
By Sumathi Feb 10, 2024 05:01 AM GMT
Report

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அனைத்துக்கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்

ஒருபுறம் தேர்தல் களப்பணிகளுக்கான முன்னேற்பாடுகள், கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள், தேர்தல் வாக்குறுதி அறிக்கை பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.

dmk arakkonam candidate

உத்தேசப்பட்டியல் அரசியல் வட்டாரங்களில் உலவி வருகின்றது. அது குறித்த தகவல்களை வெளியாகி உள்ளது அந்த வகையில், அரக்கோணம் தொகுதியில் திமுகவின் வேட்பாளராக யார் நிறுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அரக்கோணம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் A.V.சாரதி நிறுத்தப்படலாம் என சில தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்த A.V.சாரதி சிமெண்ட் மொத்த வியாபாரம், குவாரி பணிகள் ஆகியவற்றை செய்து வருகிறார். தற்போது திமுகவின் ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளராக பதவி வகித்து வரும் இவர், தான் சார்ந்த பகுதியில் கட்சிப்பணிகள் மற்றும் மக்கள் பணிகள் மூலமாக பரீட்சயமானவராக அறியப்படுகிறார்.

இளம் பெண்ணின் கையில் முத்தமிட்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளரால் சர்ச்சை

இளம் பெண்ணின் கையில் முத்தமிட்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளரால் சர்ச்சை

திமுக வேட்பாளர்

மேலும், அப்பகுதி மக்களுக்காவும், அவர் சார்ந்த சமூக மக்களுக்காவும் மேற்கொண்ட பணிகளால் கவனிக்கப்படுகிறார்.

சமீபத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டு பணிகளில் இவரது பணிகள் திமுக தலைமையாலும், இளைஞரணி தலைவரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினாலும் கவனிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.

எனவே இந்த உத்தேசப்பட்டியலில் இடம்பெற்றதற்கான காரணம் எனவும் கணிக்கப்படுகிறது. எனவே இந்த முறை இவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என சில செய்திகள் அரசியல் வட்டாரங்களில் கசியத் தொடங்கியுள்ளது.