ஜாதி பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுத்த திமுக வேட்பாளர்: தொண்டரின் பரபரப்பு வாக்குமூலம்
கோவை கிணத்துக்கடவு சட்டமன்றத் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குறிச்சி பிரபாகரன் ஜாதியின் பெயரை சொல்லி தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக திமுக தொண்டர் ஒருவர் தனது முகநூல் மூலமாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். ஆட்டோ டிரைவரான அதிரடி தினகரன் ஆரம்பகாலம் முதல் திமுகவுக்காக உழைத்து வருகிறார், இவருக்குப் பெயர் வைத்தது கலைஞராம்.
அந்த காலத்திலிருந்து திமுகவிற்கு உழைத்த குடும்பம், ஆனால் குறிச்சி பிரபாகரன் தனது பண பலத்தாலும் அடியாட்களை வைத்துக்கொண்டு திமுகவில் வேட்பாளருக்கான சீட்டை பெற்றுக் கொண்டு கடந்த முறை தேர்தலில் தோல்வி அடைந்தார். இதற்கு பொதுமக்கள் பணம் பெற்றுக்கொண்டு தோற்றதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்ததையடுத்து பிரபாகரனிடம் விசாரித்துள்ளார் தினகரன், அப்படித்தான் பணம் வாங்குவேன் நீ போடா என்று என்னை மிரட்டி அனுப்பி விட்டார்.
நான் இதுகுறித்து தலைமைக்கு புகார் அளித்தேன், அதன்பேரில் ஸ்டாலின் பிரபாகரனிடம் இருந்து குறிச்சி பகுதி கழக செயலாளர் பதவியை பறித்து விட்டார். அன்று முதல் தொடர்ந்து என் ஜாதியின் பெயரை கூறி அவருடைய அடியால் நிசார் மூலம் பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார். நானும் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
பிறகு கட்சியினரின் வற்புறுத்தலால் புகாரை திரும்பப் பெற்று உள்ளேன், தற்போது மீண்டும் திமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குறிச்சி பிரபாகரன் என் ஜாதியின் பெயரை சொல்லி கொலை செய்வதாக மிரட்டுகிறார். என் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழுப்பொறுப்பும் கிணத்துக்கடவு சட்டமன்ற வேட்பாளர் பிரபாகரன்தான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.